கல்வியியலும் கணிப்பீட்டியலும் |
கற்றல் கற்பித்தற் செயற்பாட்டிலே கணிப்பீட்டியல் ஒன்றிணைந்த கூறாக வளர்ச்சி பெறத் தொடங்கியுள்ளது. கணிப்பீடு தொடர்பான தவறான கருத்தாக்கம் (ஆளைஉழnஉநிவழைn) பல்வேறு மட்டங்களிலும் காணப்படுவதால் இத்துறையில் ஒரு நூலாக்கத்தின் தேவையைப் பலரும் வேண்டி நின்றனர். கற்றல் கற்பித்தலிலே உரிய கவனம் செலுத்தப்படாது, கணிப்பீட்டில் மட்டும் ஊன்றிய கவனம் செலுத்தப்படும் நிலையில் இத்துறையிலே தெளிவான காட்சியை ஏற்படுத்த வேண்டிய சமூகத் தேவையும் தோற்றம் பெற்றுள்ளது. நவீன கல்வி விருத்தியில் கணிப்பீடு ஒரு முதன்மை விடயமாக கருவியாக உருமாற்றம் பெற்று வளர்ந்துள்ளது. அதாவது கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒரு அறிகை முறைமையாகவும் செயல்வாதமாகவும் பரிமாணம் பெற்றுள்ளது. இதனால் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒன்றிணைந்த கூறாக வளச்சிபெறத் தொடங்கியுள்ளது. ஒரு நிலையில் கணிப்பீடுதான் முழுமையான கல்வி அம்சமாகவும் உருமாற்றம் பெற்றுள்ளது. சாதாரண பொதுப்புத்தி மட்டங்களில் |